Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேரளாவிலும் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் - பினராயி விஜயன் அறிவிப்பு...!

கேரளாவில் எந்தவித அரசு நலத்திட்டத்தின் கீழும் நிதி உதவி பெறாத பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
09:18 PM Oct 30, 2025 IST | Web Editor
கேரளாவில் எந்தவித அரசு நலத்திட்டத்தின் கீழும் நிதி உதவி பெறாத பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
Advertisement

தமிழ் நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அரைவில் உள்ளாட்சி தேர்தலும் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலும் நடந்து வருகிறது.

Advertisement

இந்த நிலையில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் முக்கிய நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.

அதன்படி, எந்தவித அரசு நலத்திட்டத்தின் கீழும் நிதி உதவி பெறாத 35 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் பெண்களுக்கு ‘மகளிர் பாதுகாப்பு திட்டத்தின்' கீழ்  மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.3,800 கோடி நிதி ஒதுக்கப்படும். மாதம் 1,600 ரூபாயாக வழங்கப்பட்டு வரும் சமூக பாதுகாப்பு பென்சனானது மாதம் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

கிலோவுக்கு 28.20 ரூபாயாக வழங்கப்பட்டு வரும் நெல் கொள்முதல் விலையானது 30 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்களுக்கான மாதாந்திர கௌரவ ஊதியம் ரூ.1,000 அதிகரிக்கப்படுகிறது”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
1000penshionKeralalatestNewsPinarayiVijayanwomen
Advertisement
Next Article