For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சினிமாவில் 10 ஆண்டுகள் நிறைவு: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ்!

03:09 PM Nov 15, 2023 IST | Student Reporter
சினிமாவில் 10 ஆண்டுகள் நிறைவு  ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ்
Advertisement

சினிமாவில் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நடிகை கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

Advertisement

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். பின்னர் மோகன் லாலின் 'கீதாஞ்சலி' திரைபடத்தில் நாயகியாக  அறிமுகமானார். நவம்பர் 14, 2013 ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி திரைபடம் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது.  அதன்பின், கீர்த்தி சுரேஷ்   2015-ல் 'இது என்ன மாயம்'  படத்தின் மூலம் தமிழில்  அறிமுகமனார். இத்திரைப்படம் கீர்த்திக்கு தமிழ் திரையுலகில் பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது.  தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்டோருடன் இணைந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, மாமன்னன் போன்ற படங்களில் நடித்தார். 

இதையும் படியுங்கள்: எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரையுலக நடிகவேள் – நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!

இதுவரை 30-க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். அடுத்ததாக,  இவர் நடிப்பில் உருவான 'சைரன்', 'ரகு தாதா', 'ரிவால்வர் ரீட்டா', 'கன்னிவெடி' ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன.  மேலும், அட்லி தயாரிப்பில் ஹிந்தி ரீமேக்கான 'தெறி' படத்திலும் நாயகியாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.   அவர் நாயகியாக நடித்த மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி (நடிகையர் திலகம்) படமே கீர்த்தியின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. 

மேலும்,  தனக்கான மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது, 10 வயது குழந்தைக்கு தாயாக சாணிக்காயிதம் படத்திலும் நடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தார்.  நடிப்பு மட்டுமின்றி நன்றாக நடனமாடக்கூடியவர் என்கிற பாராட்டுக்களையும் பெற்றவர்.  குறிப்பாக,  மகேஷ் பாபுவின் 'சர்க்கார் வாரி பட்டா'  படத்தில் இடம்பெற்ற 'மா.. மா.. மகேஷா' பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்ததுக்கு கீர்த்தியின் நடனமே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.  நல்ல நடிப்பாற்றலும்,  அழகும் கொண்ட நாயகிகளில் கீர்த்திக்கு முக்கியமான இடம் உண்டு. கீதாஞ்சலியில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நாயகியாக தன் சினிமா வாழ்வில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.  இந்நிலையில், இதற்காக விடியோ வாயிலாக தன் நன்றியைத் தெரிவித்தார்.

அதில், “எல்லாருக்கும் வணக்கம்.  இன்று முக்கியமான நாள், முதலில் அம்மா, அப்பாவிலிருந்து ஆரம்பிக்கிறேன்.  அவர்கள் இல்லையென்றால் நான் இன்று இருக்கும் இடத்தில் இருந்திருக்க மாட்டேன். எந்த விதத்தில் நன்றி சொல்ல முடியும் எனத் தெரியவில்லை. என் குரு இயக்குநர் பிரியதர்ஷன் மாமா, அவரே எனக்கான தொடக்கத்தை அமைத்துத் தந்தார். அதற்காக என்றென்றும் விஸ்வாசம் உண்டு. என் இயக்குநர்கள், சக நடிகர்கள், நலம் விரும்பிகளுக்கு என் நன்றி. முக்கியமாக ரசிகர்கள், நீங்கள் இல்லையென்றால் நான் இல்லை. இதேபோல் என்றும் என் மேல் அன்புடன் இருங்கள். அனைவருக்கும் நன்றி" எனக் கூறியுள்ளார்.

Tags :
Advertisement