10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்; ஒன்பது நாள் ஆகியும் நடவடிக்கை இல்லை; உறவினர்கள் குற்றச்சாட்டு!
கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 8 தனிப்படைகள் அமைத்து 8 நாட்களாகியும் இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் அரசை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் ஆர்ப்பாட்டம் நடைபெற்து.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து அதிமுகவினர் ஊர்வலமாக சென்று ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களுடன் இணைந்து முன்னாள் எம்எல்ஏக்கள் சிறுணியம் பலராமன், விஜயகுமார், தலைமையில் அதிமுகவினர் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட வட மாநில குற்றவாளி ரயிலில் பயணிக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் குற்றவாளி சிறுமியை வாயை மூடி தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளியின் தெளிவான புகைப்படங்கள் நேற்று காலை வெளியாக்கியது.
இந்த நிலையில் மீண்டும் குற்றவாளி ரயில் படிக்கட்டில் அமர்ந்தபடி ரயிலில் பயணிக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனை புகைப்படம் இருந்தும் இன்னும் ஏன் குற்றவாளியை நெருங்க முடியாத மெத்தனப்போக்கு காவல்துறையாக உள்ளது என்று சிறுமியின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஒன்பதாவது நாள் ஆகியும்இன்னும் குற்றவாளியை நெருங்க முடியாத திருவள்ளூர் மாவட்ட காவல் நிர்வாகம்தெள்ளத் தெளிவாக புகைப்படம் இருந்தும் கைது செய்யாமல் இருக்கிறது. குற்றவாளியை நெருங்குவார்களா அல்லது மெத்தனப்போக்கு காட்டி வருமா சிறுமியின் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.