இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி - இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கு எதிராக நேற்று நடைப்பெற்ற 2வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணி சமன் செய்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்திவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு, பின்னர் இப்போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 29 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களை சேர்த்தது.
அதனைதொடர்ந்து 144 ரன்களை இழக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி 18.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்களை சேர்த்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால், அப்போட்டி (DLS) முறைப்படி 24 ஓவர்களுக்கு 115 ரன்கள் இலக்காக மாற்றப்பட்டது. அதன்படி விளையாடிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழந்து 21 ஓவர்களிலேயே 116 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய இங்கிலாந்து மகளிர் அணியின் சோஃபி எக்லெஸ்டன் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒரு நாள் போட்டி நாளை மறுநாள் ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற உள்ளது.