அறுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளில் 10 பேருக்கு புற்றுநோய் - விந்தணு கொடையாளியால் அதிர்ச்சி!
புற்றுநோய் தொடர்புடைய மரபணு மாற்றத்தால் பாதிக்கப்பட்டு விந்தணு கொடையளித்த ஒருவரால் ஐரோப்பா நாடுகளில் பத்து குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகமான தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அதில், விந்தணி கொடையாளி ஒருவரிடம் இருந்து கடந்த 2008 மற்றும் 2015 ஆண்டுகளில் விந்தணு பெற்றுக்கொண்ட விந்தணு சேமிப்பு மையத்தில், அவரின் விந்தணுவை பெற்றுக்கொண்டு டஜன் கணக்கில் கருவுறச்செய்துள்ளனர். இதையடுத்து அவரின் விந்தணுவால், முன்பு பயனடைந்த இரு குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்தபோது, மரபணுவில் மாற்றம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர், சம்பந்தப்பட்ட விந்தணு சேமிப்பு மையத்தை மருத்துவர்கள் அணுகியபோது, கொடையாளிடம் இருந்து பெறப்பட்ட விந்தணுவில் புற்றுநோய் தொடர்பான TP53 மரபணு மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை அந்த கொடையாளியிடம் இருந்து எட்டு ஐரோப்பிய நாடுகளில் உள்ள 46 குடும்பங்களைச் சேர்ந்த 67 குழந்தைகளுக்கு மரபணு பரிசோதிக்கப்பட்டுள்ளது.
அதில் 23 குழந்தைகளுக்கு TP53 மரபணு மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 10 குழந்தைகள் லுகேமியா அல்லது ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நிபுணர்கள், கொடையாளிகளிடம் இருந்து விந்தணு பெறப்படுவதற்கு முன்பு சரியான முறையில் சோதித்து விந்தணுக்களை சேமிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.