Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

12:32 PM Dec 09, 2023 IST | Web Editor
Advertisement

அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்காமல்,  அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பதால் தான் சென்னை மழை, வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்
அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது:

"சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்தரங்கில் பங்கேற்பதற்காக
மதுரை வந்துள்ளேன்.  உடனடியாக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த
வேண்டும்.  ஒரு முறை முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.  மாநில அரசு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என முதலமைச்சர் கூறி இருக்கிறார். ஆனால்
பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.  கர்நாடகாவில்
எடுத்திருக்கிறார்கள்.  சென்சஸ் மற்றும் சர்வே 2-க்கும் உள்ள வித்தியாசத்தை
தமிழ்நாடு அரசு புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

மேலும் "1931-ல் கடைசியாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இதன் மூலம் உண்மையாக பின்தங்கி உள்ள மக்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு சலுகைகள்,  இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.  இதுதான் உண்மையான சமூக நீதி.  அதிகாரம் இருந்தும் எடுக்க மாட்டோம் என்று கை கழுவி விடுவது சமூகநீதிக்கு எதிரான சமூக அநீதி.  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் சமூகநீதிப் பற்றி திமுக பேச வேண்டாம்.  இந்தியா முழுவதும் கணக்கெடுப்பு நடைபெறுகிறது திமுக அரசு தட்டிகழிப்பதற்கு என்ன காரணம்" என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து "பின் தங்கிய சமுதாயத்தின் முன்னேற்றம் தான் உண்மையான சமூகநீதி.  உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீடை 50%-கும் மேல் கிடையாது என தீர்ப்பு வந்து விட்டால்
அதற்கு திமுகவும், அதிமுகவும் தான் காரணம்.  சென்னையில் புயலுக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பவில்லை.  பலர் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை.  பலருக்கு பால்,  குடிநீர் கூட கிடைக்கவில்லை.  அதிகாரிகள் வேலை செய்கிறார்கள் ஆனால் வேகம் பத்தவில்லை அதற்கு சரியான திட்டமிடுதல் இல்லை" என்றார்.

இதையும் படியுங்கள்: மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் – தெலங்கானாவில் இன்று முதல் அமல்.!

தொடர்ந்து பேசிய அவர் "2015-ல் வந்த வெள்ளத்தை பார்த்த பிறகும் கூட இன்னும் பாடம்
கற்றுக்கொள்ளவில்லை.  இனிமேலும் பாடம் கற்றுக்கொள்ள போவதில்லை,  மக்களும் மறந்து விடுவார்கள்.  உலக வெப்பநிலை அதிகமாகும் காரணங்களால் இன்னும் மோசமான விளைவுகள் வரும்.  இன்னும் 5 ஆண்டுகளில் சென்னைக்கு அடுத்த பெரிய வெள்ளம் வரும். இன்னும் 10 ஆண்டுகளில் உணவு தட்டுப்பாடு வரும்.  ஆனால் தற்போதைய தமிழ்நாடு அரசு விளை நிலங்களை கைப்பற்றி அதை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது" என்றார்.

தமிழ்நாட்டில் 65% தொழிற்சாலைகள் சென்னையை சுற்றி 100 கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே உள்ளன.  சென்னையில் 4%ஆக்கிரமிப்புகள் மட்டும் தான் ஏழை எளிய மக்களின்
ஆக்கிரமிப்பாக உள்ளது.  மீதம் 96% அரசு மற்றும் பெரிய தொழிலதிபர்கள்
தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள்.  திராவிட ஆட்சி வந்த பிறகு தமிழ்நாட்டில் 300
ஏரிகள் காணவில்லை.  சென்னையில் உள்ள வடிகால் போல இந்தியாவில் வேறு எங்கும்
இல்லை.  ஆனாலும் இந்த சேதங்கள் ஏற்படுவதற்கு காரணம் திராவிட கட்சிகள் தான்" எனத் தெரிவித்தார்.

மேலும்,  "புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து நான் மட்டும் தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.  மற்ற கட்சிகள் இதைப்பற்றி பேசுவதில்லை.  இளைஞர்களும் சினிமா மற்றும் ஐபிஎல் மேல் மட்டும்தான் கவனம் செலுத்துவது போல் தெரிகிறது.  இதைப்
பற்றி யாரும் சிந்திப்பதில்லை.  வைகை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலக்கப்பட்டுள்ளது. சமீப காலத்தில் தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள் கொடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள்.  இது கண்டிக்கத்தக்கது.  இதைத் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலாக நான் பார்க்கிறேன்.  இதை அரசு கட்டுப்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

தொடர்ந்து "கஞ்சா, போதை பொருள் பயன்பாடு அதிகமாகியுள்ளது.  மதுரையில் தொழில்நுட்ப பூங்கா 6 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது.  ஆனால் அது பத்தாது இடத்தை மாற்றி ரிங் ரோடு பகுதியில் இன்னும் பெரியதாக அமைக்க வேண்டும்" என்றார்.

மேலும் "இருக்கக்கூடிய வடிகால்களை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும்.  எண்ணூரில் தூர்வாரப்படாததால் தான் ரசாயன கழிவுகள்,  எண்ணெய் கலந்துள்ளது.  சென்னையை சுற்றி புதியதாக 10 ஏரிகள் உருவாக்க பட வேண்டும்.  பிரச்னை என்னவென்றால் அடுத்த
தலைமுறைகளை பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.  அடுத்த தேர்தலை பற்றி தான்
சிந்திக்கிறார்கள்.  முதலமைச்சர் 4000 கோடி ரூபாய் செலவிட்டதாக சொல்கிறார்.  ஆனால்
அமைச்சர் 1900 கோடி ரூபாய் தான் செலவிட்டதாக சொல்கிறார்கள். முதலில் இதற்கு அவர்கள் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். சென்னையில் 99% நீர் அகற்றப்பட்டு
விட்டதாக தலைமைச் செயலாளர் சொல்கிறா.  ஆனால் இது பொய்.  பலர் இறந்ததாக செய்தித்தாள்களில் வருகிறது.  ஆனால் அரசு எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.  புயலால் அடுத்து தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது.  அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.

Tags :
AirportAnbumani RamadossMadurainews7 tamilNews7 Tamil UpdatesPMK
Advertisement
Next Article