இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால், ஹமாஸ் தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் பலி!
வடக்கு காஸாவின் சாதி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு காஸாவின் சாதி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியானதாக பாலஸ்தீன அமைப்பு தெரிவித்துள்ளது. ஹனியே குடும்ப உறுப்பினர்கள் பலியானதை உறுதி செய்துள்ள ஹமாஸ் அமைப்பு, காஸாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்வதற்கு அமெரிக்க பிரதமர் ஜோ பைடனின் நிர்வாகமே பொறுப்பு எனக் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேலுக்கு ராஜ்ய மற்றும் ராணுவ ஆதரவு அளிக்கும் அமெரிக்கா காஸாவை அழித்தொழிக்க அனுமதிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாஸல், இஸ்ரேல் தாக்குதலால் இஸ்மாயில் ஹனியேவின் சகோதரி யார் ஹனியே உள்பட 10 பேர் அவரது குடும்பத்தில் பலியானதாகவும், அவர்களின் உடல்கள் கட்டட சிதைவுகளுக்கு அடியில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்.7 தொடங்கிய போரில் இதுவரை 37,600 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டாலும் போர் ஓயாது எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.