For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#2026CommonwealthGames | முக்கிய விளையாட்டுகள் நீக்கம்! இந்தியா அதிர்ச்சி!

01:58 PM Oct 22, 2024 IST | Web Editor
 2026commonwealthgames   முக்கிய விளையாட்டுகள் நீக்கம்  இந்தியா அதிர்ச்சி
Advertisement

காமன்வெல்த் போட்டியில் இருந்து 10 விளையாட்டுகள் தவிர முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.

Advertisement

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1911-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. கடைசியாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் 2022-ம் ஆண்டு நடைபெற்றது. 2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்டு 2ம் தேதி வரை நடக்கிறது.

12 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு இந்தப் போட்டி நடக்கிறது. கடைசியாக 2014-ல் நடைபெற்றது. 23-வது காமன்வெல்த் விளையாட்டான இதில் இடம் பெறும் போட்டிகள் குறித்து காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு இன்று அறிவித்தது. ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த முறையும் துப்பாக்கி சுடுதல் இடம் பெறவில்லை. தற்போதும் சேர்க்கப்படவில்லை.

செலவை கட்டுப்படுத்தும் விதமாக டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், டிரையத்லான் ஆகிய போட்டிகளும் நீக்கப்பட்டுள்ளன. கடந்த முறை இடம் பெற்ற போட்டியில் 7 விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டுகள் நீக்கப்பட்டது இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பாகும். ஏனென்றால் இந்த விளையாட்டுகளில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படியுங்கள் :அடுத்த 2 மணி நேரம்…8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு | #IMD எச்சரிக்கை

கடந்த முறை இந்தியா பதக்கம் வென்ற 6 விளையாட்டுகளும் தற்போது நீக்கப்பட்டு உள்ளன. காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் இந்த முடிவு இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். 2022 காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் ஆக மொத்தம் 61 பதக்கம் பெற்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement