Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் 10 லட்சம்... காவலர்கள் தாக்கி உயிரிழந்தால் 5 லட்சமா - சீமான் கேள்வி?

அஜித்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நிகிதாவை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
06:48 AM Jul 05, 2025 IST | Web Editor
அஜித்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நிகிதாவை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
Advertisement

சிதம்பரம் காட்டுமன்னார்கோயிலில் தமிழ் தேசிய அரசியல் போராளி கலியபெருமாள் மற்றும் சமூகநீதி பெருங் காவலர் ஆணைமுத்து ஆகியோரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அப்போது மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த கலியபெருமாள் மற்றும் ஆணைமுத்து, இளையபெருமாள் ஆகியோர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisement

தொடர்ந்து மேடையில் கலியபெருமாள் மற்றும் ஆணைமுத்து, இளையபெருமாள் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதைகள் வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து மேடையில் பேசிய சீமான், கலியபெருமாள், ஆனைமுத்து ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி எடுத்து கூறினார். இட ஒதுக்கீட்டு நாயகன் தாத்தா ஆனைமுத்து சாதனையை பாராட்டியவர் பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ், மற்ற எந்த கட்சிகளும் அவரது சாதனையை பாராட்டவில்லை.

இந்த நாட்டிலே தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தான் அதிகம், அவர்களுக்கு அதிகாரம் இதுவரை வழங்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்க வேண்டும். வருகின்ற எட்டாம் தேதி எனது தலைமையில் அஜித் உயிரிழப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பாக திருபுவனத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், "அஜித் குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக நிகிதாவை சேர்த்து அவரை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும். காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் அம்மாவை சந்தித்து விட்டு போராட்டதை தொடருவோம. மேலும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் அரசு 10 லட்சம் தருகிறது. காவலர்கள் தாக்கி உயிரிழந்தால் 5 லட்சம் தருகிறது. எளிய மகன் நானே எங்கள் அம்மாவிற்கு 5 லட்சம் தருகிறேன். இதுதான் உயிருக்கு மதிப்பா என்று தெரிவித்துள்ளார்.

Tags :
AjithkumarajithkumarcasegoldmissingMKStalinnikithapoliceattackSeeman
Advertisement
Next Article