For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

’தெலங்கானாவில் நாள் ஒன்றுக்கு 10 குழந்தைகள் மாயம்’ - வெளியான அதிர்ச்சித் தகவல்

03:14 PM Dec 11, 2023 IST | Web Editor
’தெலங்கானாவில் நாள் ஒன்றுக்கு 10 குழந்தைகள் மாயம்’   வெளியான அதிர்ச்சித் தகவல்
Advertisement

தெலங்கானா மாநிலத்தில் நாள்தோறும் 10 குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

தேசிய குற்ற பதிவு காப்பகத்தின் 2022-க்கான அறிக்கை கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  ஆண்டுதோறும் வெளியாகும் இந்த அறிக்கை,  பல்வேறு சமூக பிரச்னைகளின் தீவிரத்தைத் தெரிவிப்பதாக இருந்து வருகிறது.  அரசு நிர்வாகத்தின் திட்டமிடலுக்கும்,  குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன.

மகளிர்,  குழந்தைகள்,  முதியோர்,  பட்டியலினத்தவர்,  பழங்குடியினர் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக அதிகரித்திருப்பதை 2022-ஆம் ஆண்டுக்கான காப்பக அறிக்கை வெளிப்படுத்துகிறது.  இந்த அறிக்கையானது தேசிய அளவில் நடக்கும் குற்றங்களின் துல்லியமான கணக்கெடுப்பு இல்லை என்றும் ஆவணக் காப்பகம் கூறுகிறது.  பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் புள்ளிவிவரங்களை தவிர, மற்ற  நிகழ்வுகள்  கணக்கெடுக்கப்படுவதில்லை என்பதையும்  அறிக்கை முதலிலேயே தெரிவிக்கிறது.

தேசிய குற்றப் பதிவு காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் 3,443 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள்.  இதுவரை காணாமல் போன குழந்தைகளில் 4,097 பேர் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.  இதில், தெலங்கானா மாநிலத்தில் மட்டும் சராசரியாக நாள்தோறும் 10 குழந்தைகள் காணாமல் போவதாகவும்,  ஒவ்வொரு 10 ஆயிரம் குடும்பத்தில் ஒரு குழந்தை காணாமல் போவதாகவும்,  கடந்த 2020-2022ஆம் ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் காணாமல்போயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை காணாமல் போய்விட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதும், உடனடியாக,  குழந்தையின் புகைப்படத்தோடு,  அவரின் அனைத்து தகவலோடும், அனைத்துக் காவல்நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்படும்.  அனைத்து வகைகளிலும் தேடுதல் பணி நடைபெறும்.  நான்கு மாதங்களில் காணாமல் போனவர் கிடைக்கப்பெறவில்லை என்றால்,  அது மனித கடத்தல் பிரிவுக்கு மாற்றப்பட்டு,  அவர்கள் விசாரணை நடத்துவது நடைமுறையாக இருப்பதாக, அந்த மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement