Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாலை விபத்துகளால் ஆண்டுக்கு 1.8 லட்சம் பேர் உயிரிழப்பு - நிதின் கட்காரி தகவல்!

சாலை விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8 லட்சம் பேர் உயிரிழப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
04:58 PM Apr 03, 2025 IST | Web Editor
Advertisement

மக்களவையில் இன்றய கேள்வி நேரத்தின் போது மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி பேசுகையில், ஓட்டுநர்களுக்கான பயிற்சி நிறுவனங்களை மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

Advertisement

"உலக வங்கி அறிக்கையின்படி, இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுனர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. நாட்டில் சரியான ஓட்டுநர் பயிற்சி இல்லாதது பல விபத்துகள் மற்றும் உயிரிழப்புக்கு காரணம்.

நாடு முழுவதும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை படிப்படியாக அமைக்க ரூ.4 ஆயிரத்து 500 கோடி திட்டத்தை தொடங்கியுள்ளது. இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இது போன்ற 1600 நிறுவனங்களை அமைக்கும். இவை அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளது.

மேலும் சாலை விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் பல விபத்துகள் பயிற்சி பெறாத ஓட்டுநர்களால் ஏற்படுகின்றன. ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பிராந்திய ஓட்டுநர் பயிற்சி மையங்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றை அமைப்பதற்கு பொருத்தமான திட்டங்களை அனுப்புமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது". இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

Tags :
every yearINFORMATIONNitin GadkariPeopleRoad accidents
Advertisement
Next Article