Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆண்டுதோறும் 1.70 கோடி உயிரிழப்புகள் | "வாழ்க்கை முறையை மேம்படுத்தினால் இதய நோய்களை தடுக்க முடியும்" - டாக்டர் #SelvaVinayagam

11:02 AM Sep 30, 2024 IST | Web Editor
Advertisement

நமது வாழ்க்கை முறையை மேம்படுத்தினால் இதய நோய்களை தடுக்க முடியும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

Advertisement

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

"உலக சுகாதார அமைப்பு ஆய்வின்படி, ஆண்டுதோறும் சுமார் 1.70 கோடி பேர் மாரடைப்பு, பக்கவாதம், இதய நோய் ஆகியவை இதய கோளாறுகளால் உயிரிழக்கின்றனர். குறிப்பாக, இளம் வயதினருக்கும் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு சமம். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி 'உலக இதய தினம்' கடைபிடிக்கப்படுகிறது.

'இதயம் சார்ந்து செயல்படுங்கள்' என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருள். நமது இதய பாதிப்புகளுக்கான காரணிகளை தவிர்த்து. நம் வாழ்க்கை முறையை மேம்படுத்தினால் இதய நோய்களை தவிர்க்க முடியும் என்பதே இதன் பொருள். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், புகைபிடித்தல் ஆகியவை இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் முக்கிய காரணிகள்.

இதையும் படியுங்கள் : Weatherupdate | தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கப்பட்ட 'மக்களை தேடி மருந்துவம்' திட்டத்தில் மக்களின் இல்லங்களுக்கே சென்று உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை 1.95 கோடி பேர் முதல் முறையாக பயனடைந்தனர். 4.16 கோடி பேர் தொடர் சேவை பெற்று வருகின்றனர்.

இதய நோய் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறியும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 'இதயம் காப்போம் திட்டம்' தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறை செயல்படுத்தி வரும் இத் திட்டங்கள், இதய நோய் பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வழிவகை செய்கிறது. உலக இதய நாளில் நமது இதயம் சார்ந்து செயல்பட்டு மனித ஆரோக்கியத்தை மேம்படுத்த உறுதி ஏற்போம்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
1.70 crore deathsheart diseaselifestylePrevent
Advertisement
Next Article