“இந்தியாவில் 1.2 % பேர் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்டர்” - மத்திய கல்வி அமைச்சகம்!
மக்களவை உறுப்பினர் சுப்புராயன், நாடு முழுவதும் நடைபெறும் தேசிய நுழைவுத் தேர்வு மற்றும் தேர்வு மையங்களில் ஏற்படும் மரணங்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார், “நாடு முழுவதும் நிகழும் உயிரிழப்புகள் குறித்த தரவுகள் தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகத்திடம் உள்ள நிலையில் கடந்த 2022ம் ஆண்டு தரவுகளின் படி நாட்டில் நிகழும் மொத்த உயிரிழப்புகளில் 7.6 சதவீதம் என்றால், அதில் 1.2 சதவீதம் தேர்வுகளில் ஏற்படும் தோல்விகள்தான் காரணம்.
மாணவர்கள் தேர்வுக்கு தயாராக நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பயிற்சி மையங்களினால் ஏற்படும் மன அழுத்தம், கட்டண கொள்ளை உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் கடந்த வருடம் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளோம்” என்று மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் தெரிவித்துள்ளார்.