Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மின்சாரம் தாக்கி 1½ வயது குழந்தை உயிரிழப்பு!

09:30 PM Jan 07, 2025 IST | Web Editor
Advertisement

கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 1½ வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சொரட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆஞ்சநேயா. இவருக்கு 1½ வயதில் மஞ்சு என்ற ஆண்குழந்தை இருந்தான். இந்த நிலையில், ஆஞ்சநேயாவின் மனைவி, தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக மின் மோட்டாரை போட்டுவிட்டு  வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த மஞ்சு இதை பார்த்தான்.

இதனையடுத்து மின் மோட்டாரின் அருகே சென்ற மஞ்சு அங்கிருந்த வயரை கையில் பிடித்தான். இதில் மஞ்சு மீது மின்சாரம் தாக்கிய நிலையில் தூக்கி வீசப்பட்டான். சத்தம் கேட்டு மஞ்சுவின் தாயார் வெளியே ஓடி வந்து பார்த்தபோது மஞ்சு கீழே கிடந்தான். அவர் மஞ்சுவை எழுப்ப முயன்றபோது அவன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஒன்னாளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மஞ்சு உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மின் மோட்டாரை சுற்றி பாதுகாப்பு உபகரணங்கள் மஞ்சு உயிரிழப்புக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஒன்னாளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 1½ வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Next Article