இரண்டு நாட்களில் ₹1,200 குறைந்த சவரன் - தங்கம் வாங்க இது சரியான நேரமா?
தங்கம் விலை ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஏற்றம், இறக்கம் எனத் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த விலை மாற்றம், முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில், கடந்த வாரம் முழுவதும் உயர்ந்து காணப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது வீழ்ச்சிப்பாதையில் உள்ளது. நேற்று, ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.75,000-க்கு விற்பனையானது. இந்த விலை வீழ்ச்சி இன்றும் தொடர்கிறது.
இரண்டாவது நாளாக, இன்று ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.9,295-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.74,360-க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.1,200 வரை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலையைப் போலவே, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.126-க்கும், ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1,26,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து மாறிவரும் இந்த விலை நிலவரம், தங்கம் மற்றும் வெள்ளி வாங்க நினைப்போருக்குக் குழப்பத்தையும், அதேசமயம் சாதகமான சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.