"விஜயகாந்த் நல்ல மனிதர்; இனிய நண்பர்" -நடிகர் கவுண்டமணி நேரில் அஞ்சலி
விஜயகாந்த் உடலுக்கு நடிகர் கவுண்டமணி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து விஜயக்காந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விஜயகாந்த் உடலுக்கு நடிகர் கவுண்டமணி நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விஜயகாந்த் நல்ல மனிதர்; இனிய நண்பர்" என தெரிவித்தார்.
தொடர்ந்து, விஜயகாந்த் உடலுக்கு டி.ராஜேந்தர் கலக்கத்துடன் அஞ்சலி செலுத்தினார். மேலும், இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.