வடக்கு ஆப்கனில் இணைய சேவை துண்டிப்பு - தாலிபன் அரசு நடவடிக்கை!
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 முதல் தாலிபன் ஆட்சி நடைபெற்று வருகின்றது. ஆட்சிமைத்ததில் இருந்து தாலிபன் அரசாங்கம் சர்ச்சைக்குறிய பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று தாலிபன் அரசாங்கம் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டுஸ், படாக்ஷன், பாக்லான், தகார் மற்றும் நங்கர்ஹார்ஆகிய ஐந்து மாகாணங்களில் வைஃபை இணைய சேவைகள் துண்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்த தடை உத்தரவு குறித்தான மாகாண அரசுகளின் அறிக்கையில் "ஒழுக்கக்கேடான செயல்களைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் செல்போனிற்கான இணைய சேவைக்கு இந்த தடை பொருந்தாது.
இந்த தடைக்கு பல்வேறு உரிமைக்குழுக்களும் பன்னாட்டு அரசுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த செப்.16 ஆம் தேதி முதல், வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பால்க் மாகாணத்தில் வைஃபை இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.