For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரூ.2000 நோட்டுகள் - ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

11:28 AM Aug 02, 2024 IST | Web Editor
ரூ 2000 நோட்டுகள்   ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
Advertisement

மதிப்பிழப்பு செய்யப்பட்ட 97.92% ரூ.2000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

Advertisement

2016-ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவஸ்தையைச் சந்தித்தனர். இதற்கிடையே, புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் இதை மாற்றுவதற்கும் மக்கள் சிரமப்பட்டனர்.

கடந்த ஆண்டு மே 19ஆம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இதையும் படியுங்கள் : புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நீர்க்கசிவு – மக்களவைச் செயலகம் விளக்கம்!

அப்போது 3.56 லட்சம் கோடி மதிப்புடைய ரூ. 2,000 நோட்டுகள் சந்தையில் புழக்கத்தில் இருந்தன. 2023 அக்டோபர் 7ஆம் தேதிக்குள் வங்கிகள் மூலமாகவோ, ரிசர்வ் வங்கி அலுவலகங்களிலோ நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், தற்போது புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு குறித்த தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதில், இதுவரை 97.92 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும், ரூ.7,409 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மட்டுமே இன்னும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த ஜூலை மாத தொடக்கத்தில், 7,581 கோடி ரூபாய் (2.1 சதவீதம்) பொதுமக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement