ராமநாதபுரம் | சாலையை கடக்க முயன்ற நபருக்கு நேர்ந்த சோகம் !
ராமநாதபுரத்தில் சாலையை கடக்க முயன்ற நபர் மீது அதிவேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட பதைபதைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கீழச்செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் ஆந்திராவில் தனியார் கடை ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில் சொந்த ஊரான கீழச்செல்வனூர் கிராமத்திற்கு நேற்று (டிச. 27) வந்துள்ளார். இந்நிலையில் அவர் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு முதுகெலும்பு மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து நடந்த பொழுது காரில் இருந்த கேமரா மூலம் பதிவானது. இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கீழச்செல்வனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.