Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புயல் எதிரொலி: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

02:03 PM Dec 03, 2023 IST | Syedibrahim
Advertisement

புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் டிசம்பர் 4ம் தேதி சென்னை – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் ஏற்கனவே அறிவித்த நிலையில்,  டிசம்பர் 5 -ம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்  : மிக்ஜாம் புயல் எதிரொலி : சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து,  இன்று,  காலை 11 மணி அளவில் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 730 கி.மீ., சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 740 கி.மீ.,  நெல்லூருக்கு தென்கிழக்கே 860 கி.மீ., பாபட்லாவிலிருந்து தென்கிழக்கே 930 கி.மீ., மச்சிலிப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 910 கி.மீ.  என நிலை கொண்டிருந்தது.

புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை  டிசம்பர் 4 ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags :
4 districtAnnouncementChennaiHeavy rainNew CyclonePublic holidaystormtamilnadu government
Advertisement
Next Article