தேனி | சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு!
தேனி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை மீனாட்சியம்மன் படித்துறை சாலையில் நாய்களால் தொல்லை இருந்து வந்தது. அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்களால் இரண்டு மாதத்தில் 3 விபத்துக்கள் ஏற்பட்டு 3 நபர்கள் பலியான சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் நாய்கள் வழக்கம் போல் சண்டையிட்டுக் கொண்டு சுற்றிய பொழுது கல்லூரி மாணவரின் வாகனத்தின் குறுக்கே நாய்கள் பாய்ந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.

இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து அறிந்து விரைந்து வந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் வாகனத்தில் வந்த நபர் ஷாஜகான் என்றும் அவர் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்தது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள தெரு நாய்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர்.