Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தைகள் - ரூ.28 கோடிக்கு விற்பனை!

11:15 AM Nov 10, 2023 IST | Student Reporter
Advertisement

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆட்டுச்சந்தைகள் இன்று களைகட்டின.  இன்று ஒரே நாளில் சுமார் ரூ.28 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

Advertisement

தமிழ்நாட்டில் கடலூர்,  மதுரை,  கிருஷ்ணகிரி,  விழுப்புரம் ஆகிய இடங்களில் ஆட்டுச்சந்தைகள் நடைபெற்றன.

கடலூர்

கடலூர் மாவட்டம் வேப்பூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் சுமார் ரூ.5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகின.

மதுரை

மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில்  சுமார் ரூ.7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையில் சுமார் சுமார் ரூ.8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ. 8
கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையானது.

 

 

Tags :
#Krishnakiri#Viluppuram28croresCuddaloreDiwaliGoatmarketMaduraiNews7Tamilnews7TamilUpdatesTamilNadu
Advertisement
Next Article