For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காலாவதியான நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழப்பு எதிரொலி! நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவு!

05:47 PM Sep 03, 2024 IST | Web Editor
காலாவதியான நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழப்பு எதிரொலி  நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவு
Advertisement

திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்துச் சாப்பிட்ட சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் தான் ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ், அவருக்கு வயது 15 ஆகும். மேலும் திருச்சியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவிக்கு நூடுல்ஸ் சாப்பிடுவது மிகவும் பிடிக்குமாம். இதனால் சில நேரங்களில் கடைகளில் நூடுல்ஸ் வாங்கியும், சில நேரங்களில் வீட்டிலேயே சமைத்தும் நூடுல்ஸை சாப்பிடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் ஆன்லைனில் நூடுல்ஸ் பாக்கெட் ஆர்டர் போட்டுள்ளார். சில நிமிடங்களில் வீட்டிற்கே வந்துவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் நேற்று இரவு நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்துவிட்டார். இருப்பினும், காலை அவர் நீண்ட நேரமாகியும் எழவில்லை. குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்ற போது தான் அவர் உயிரிழந்துவிட்டது தெரிய வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விசாரணை மேற்கொண்ட போது, சிறுமியின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமி உயிரிழப்புக்கு பின் விழித்துக்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் திருச்சியில் நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கிடையே சிறுமி உயிரிழந்த விவகாரம் பேசுபொருளானதால், தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. நூடுல்ஸ் தயாரிக்கப்படும் பொருட்கள் தரச் சான்றிதழ் மற்றும் பேட்ச் மற்றும் ஆகியவை இடம் பெற்றுள்ளதா எனவும் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement