கணவரை பிரிந்து தனியாக வாழும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - காவல்துறை கொடுத்த சர்ப்ரைஸ்!
சென்னை, கொளத்தூர் பகுதியில் 33 வயது பெண் ஒருவர் அவர்களின் தனிப்பட்ட காரணத்தினால் கணவரை பிரிந்து தனது தாயார் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இப்பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இப்பெண்ணின் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் மனைவியை பிரிந்து தாயார் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ராஜேஷ் மது அருந்தி விட்டு அடிக்கடி எதிர் வீட்டில் வசிக்கும் பெண்ணை அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதியன்று மாலை அந்த பெண், தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது, ராஜேஷ் அப்பெண்ணை அவதூறான வார்த்தைகளால் பேசியும், பாலியல் சைகை காட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் தொந்தரவு செய்துள்ளார்.
இதில் அச்சமடைந்த அந்த பெண் சம்பவம் தொடர்பாக ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ராஜேஷ் புகார் அளித்த பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கொளத்தூரை சேர்ந்த ராஜேஷை கைது செய்து அவரக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.