For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முக்கிய பரிந்துரைகள் 'தவறானவை' - முன்னாள் #ElectionCommissioner குரேஷி!

10:20 AM Sep 21, 2024 IST | Web Editor
 ஒரே நாடு  ஒரே தேர்தல்  முக்கிய பரிந்துரைகள்  தவறானவை    முன்னாள்  electioncommissioner  குரேஷி
Advertisement

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முக்கிய பரிந்துரைகள் 'தவறானவை' என முன்னாள் தேர்தல் கமிஷனர் குரேஷி தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கும் என தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரண மாக கால விரயமும், செலவும் ஏற்படுகிறது. ஒரே நாடு ஒரே வரி என ஜி.எஸ்.டி.யை சாத்தியப்படுத்தியதை போல‘ஒரே நாடு ஒரே ‘தேர்தல்’ முறையை கொண்டு வர பா.ஜனதா அரசு முனைப்பு காட்டி வருகிறது.

அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு:

தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த கனவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக குடியரசு மேனாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் (18.9.2024) நடைபெற்ற ஒன்றிய அமைச்சர வைக் கூட்டத்தில் ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல்’’ திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மக்களவைக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்களுக் கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும், இதன்பிறகு 100 நாட்களுக்குள் நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதே ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரை ஆகும்.
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் தந்திரமாக இதை செய்துள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சி கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு:

இதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று (19.9.2024) வெளி யிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

‘‘ஒரே நாடு ஒரே தேர்தல்’’ எனும் முன்மொழிவு நடைமுறைக்கு சாத்தியமற்றதும், இந்தியாவின் பரந்துபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களைக் கவனத்தில் கொள்ளாததும், கூட்டாட்சியியலைச் சிதைப்பதும் ஆகும். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடப்பது, அந்தந்த மாநிலத்துக்குரிய பிரச்சினைகள், ஆட்சி முன்னுரிமைகள் உள்ளிட்ட காரணங்களால் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடை முறைக்கு ஒவ்வாதது. எதார்த்தத்துக்கு முரணாக அனைத்து மாநில அரசுகளின் ஆட்சிக்காலத்தையும் ஒரே வரிசையில் கொண்டு வருவது என்பது இயல்பாக நடக்கும் அரசு நிர்வாகத்துக்கு இடைஞ்சலை உருவாக்கும்.

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முக்கிய பரிந்துரைகள் 'தவறானவை': 

இந்நிலையில், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதன் நடைமுறைத் தன்மை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்ததோடு, அதன் சில முக்கிய பரிந்துரைகளை 'குறைபாடுள்ளவை' எனக் குறிப்பிட்டு, இந்த விவகாரங்களில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

செய்தி நிறுவனத்திடம் காணொளி மூலம் பேசிய அவர், “உள்ளாட்சி அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 லட்சத்துக்கும் அதிகமான பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது,” என்றார். 100 நாட்களுக்குள் தனித்தனியாக பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை குறித்து, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையம், இது ஒரே நேரத்தில் தேர்தல் என்ற சாராம்சத்திற்கு எதிரானது என்று கூறினார்.

ஒரு சில மாத இடைவெளியில் தனித் தேர்தல் நடத்துவது குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தும் என்றும் வாக்காளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தற்போதுள்ள எண்ணிக்கையை விட மூன்று மடங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) தேவைப்படும் என்று தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு சுமார் 40 லட்சம் கூடுதல் இயந்திரங்கள் தேவைப்படும் என்றும், இது நிதி மற்றும் தளவாடக் கட்டுப்பாடுகளை உருவாக்கும் என்றும் குரேஷி கூறினார். எனவே கணக்கீடுகளைச் செய்யுங்கள், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தேவைப்படும்” என்றார். இந்தச் சவால்களைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தில் விவாதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்குமாறு எம்.பி.க்களிடம் குரேஷி வலியுறுத்தினார்.

Tags :
Advertisement