Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அக்னிபாத்” மூலம் இளைஞர்களுக்கு அநீதி - குடியரசு தலைவருக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!

02:26 PM Feb 26, 2024 IST | Web Editor
Advertisement

"அக்னிபாத்" திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தை தனது எக்ஸ் தள பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.  அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை முன்னிலைப்படுத்துவதே எனது முக்கிய நோக்கம்.  பெரும்பான்மையான அக்னிவீரர்கள் நான்கு வருட சேவைக்குப் பிறகு வேலையில்லாமல் தவிக்கும் சூழல் ஏற்படும்.  இது அவர்களின் பொருளாதார நிலையை பாதிக்கும். "அக்னிபாத்" திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டது.

 

கிட்டத்தட்ட 2 லட்சம் இளைஞர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாகிவிட்டது.  தற்கொலை செய்து இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது.  தேசபக்தி மற்றும் வீரம் நிறைந்த ஆயுதப் படைவீர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.  எங்கள் இளைஞர்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. நியாயம் மற்றும் நீதியை உறுதிப்படுத்துமாறு நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்”

இவ்வாறு அந்த கடிதத்தில் மல்லிகார்ஜூன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags :
agnipath schemeDroupadi MurmuIndiaMallikarjune Kharge
Advertisement
Next Article