மனைவியுடன் உணவு டெலிவரி செய்த #Zomato CEO தீபிந்தர் கோயல்!
சோமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் தனது மனைவி கிரேசியா முனோஸுடன், உணவு டெலிவரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சோமேட்டோ, கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய பணக்காரர்களில் ஒருவரான தீபிந்தர் கோயலால் தொடங்கப்பட்டது. தற்போது இந்நிறுவனம் இந்தியா மட்டுமின்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என பல நாடுகளில் வணிகம் செய்து வருகிறது. சோமாட்டோவின் சந்தை மதிப்பு பல லட்ச கோடியாகும். சமீபத்தில் தீபிந்தர் கோயல் தனது பெயரை ஜியா கோயல் என மாற்றம் செய்தார்.
இந்நிலையில் தீபிந்தர் ஒருநாள் டெலிவரி மேனாக மாறியுள்ளார். Zomato எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிய நினைத்த தீபிந்தர், சோமேட்டோ சிறுடை அணிந்து, தனது மனைவி கிரேசியா முனோஸுடன் இரண்டு நாட்களுக்கு முன் டெலிவரி ஏஜென்டு போல் உணவு டெலிவரி செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தீபிந்தரை பார்த்த வாடிக்கையாளர்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர். அவருடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். ஹரியானாவின் குருகிராமில் உணவு டெலிவரி செய்துள்ளார். 20 மணிநேரத்திற்கும் முன்பு பகிரபட்ட இந்த பதிவு 45 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றுள்ளது. கோயல் மற்றும் அவரது மனைவியின் அணுகுமுறையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.