சவூதி அரேபியாவில் Zoho CEO | வைரலாகும் ஸ்ரீதர் வேம்பு புகைப்படங்கள்!
Zoho CEO ஸ்ரீதர் வேம்பு சவுதி அரேபியாவின் ரியாத்தில் குழு விருந்தின் போது அவருக்கு அவரது சக ஊழியர்கள் பரிசளித்த thawb அணிந்திருந்தார்.
இந்த பயணித்தில் மிகவும் முக்கியமாக ஸ்ரீதர் வேம்பு சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் ஜெட்டாவில் இரு டேட்டா சென்டர்களை நிறுவும் திட்டத்தை அறிவித்தார். இதை தொடர்ந்து LEAP நிகழ்ச்சியில் உரையாற்றினார், இந்த நிலையில் நேற்று முந்தினம் மாலை சவுதியில் இருந்து சென்னை திரும்பினார்.
ZOHO சிஇஓ ஸ்ரீதர் வேம்பு சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் எடுத்துக் கொண்ட படங்களை பகிர்ந்துள்ளார். அந்த நாட்டின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் ஸ்ரீதர் வேம்பு சவூதி அரேபியாவின் தேசிய ஆடையான thawb அணிந்திருந்தார்.
ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்துள்ள படங்களில் அவர் ஒரு வெள்ளை நிற நீண்ட thawb அணிந்திருந்தார். இது சவூதி அரேபிய ஆண்கள் உடுத்தும் ஆடையாகும். அத்துடன் பாரம்பரியமான ஷெமாக் எனும் தலைப்பாகையையும் ஸ்ரீதர் வேம்பு அணிந்திருந்தார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.