#T20Cricket | உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே | 43 பந்துகளில் 133 ரன்கள் விளாசிய சிகந்தர் ராசா!
டி20 உலகக் கோப்பை தொடரில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் குவித்து ஜிம்பாப்வே அணி சாதனை படைத்துள்ளது.
ஜிம்பாப்வே - காம்பியா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. இறுதியில், நிர்ணயக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழந்து 344 ரன்கள் குவித்தது. இதையடுத்து, களமிறங்கிய காம்பியா அணி 14.4 ஓவரில் 54 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 290 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன்மூலம், இந்த போட்டியில் ஜிம்பாப்வே பல சாதனைகள் படைத்தது. அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் டி-20 போட்டியை வென்ற அணி என்ற உலக சாதனையையும் ஜிம்பாப்வே படைத்து அசத்தியது. அந்த அணியின் கேப்டனாக சிகந்தர் ராசாவில் பல சாதனைகள் படைத்தார். 43 பந்துகளில் சதம் விளாசிய அவர், டி20-யில் அதிவேகமாக சதம் விளாசியவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தார்.
இதையும் படியுங்கள் : #BiggBoss8 – சப்பாத்தியில் அதிக உப்பு | ஜாக்குலினை உருவ கேலி செய்த சௌந்தர்யா! வலுக்கும் கண்டனம்!
அத்துடன் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றார். இது அவருக்கு 17-வது ஆட்ட நாயகன் விருதாகும். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விராட் கோலி, வீரன்தீப் சிங், சூர்யகுமார் யாதவ் சாதனையை முறியடித்துள்ளார்.