Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#ZEROACCIDENTDAY சென்னையில் எந்த விபத்தும் நிகழவில்லை - போக்குவரத்து காவல்துறை!

10:35 AM Aug 27, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் எந்த ஒரு இடத்திலும் நேற்று விபத்துகள் நிகழவில்லை என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

Advertisement

சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் ஆக.5ல் துவங்கி 25ஆம் தேதிவரை  20 நாட்களுக்கு, 'விபத்தில்லா நாள்' என்ற இலக்குடன் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.  ‘ZERO ACCIDENT DAY’ என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பல்வேறு இடங்களில் நடத்தி பொதுமக்கள் 26 ஆம் தேதி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த விழிப்புணர்வு பிரசார காலத்தில் 6 நாட்கள் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

மேலும் சென்னையில் எந்த ஒரு இடத்திலும் நேற்று விபத்துகள் நிகழவில்லை என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ‘ZERO ACCIDENT DAY’ நிறைவேற்றப்பட்டது.

Tags :
accidentsChennai City Traffic PoliceZero Accident Day
Advertisement
Next Article