ஐபிஎல் வரலாற்றில் புதிய வரலாற்று சாதனை படைத்த யுஸ்வேந்திர சஹால்!
07:07 AM Apr 23, 2024 IST
|
Web Editor
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யுஸ்வேந்திர சஹால் நேற்றைய போட்டியில் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளராக மாறி சாதனை படைத்துள்ளார்.
Advertisement
ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
Advertisement
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 38ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : நடுவர் குறித்த முகமது கைஃபின் கண்டன பதிவு – லைக் போட்ட விராட் கோலி!
யுஸ்வேந்திர சஹால்க்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ 183 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய 2-வது வீரராக உள்ளார்.
Next Article