Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டீங்க..” - சிவகார்த்திகேயனுக்கு சூப்பர்ஸ்டார் பாராட்டு!

நடிகர் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.
09:56 PM Sep 10, 2025 IST | Web Editor
நடிகர் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.
Advertisement

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் - நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரது கூட்டணியில்  கடந்த அக்டோபர் 5 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது. இதன் மூலம் அமரன் வெற்றிக்கு பிறகு SK-விற்கு மற்றொரு வெற்றியாகவும், தொடர் தோல்வியில் இருந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு கம்பேக்காகவும் அமைந்துள்ளது.

Advertisement

இந்நிலையில், மதராஸி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயனை தொலைபேசியில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதனை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”சற்று முன்பு, மதராஸி படத்திற்காக எனது தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து பாராட்டுக்களைப் பெற்றேன். மை காட் எக்ஸலென்ட்.. என்ன பர்பார்மன்ஸ்..! என்ன ஆக்ஷன்ஸ்.உ! சூப்பர் சூப்பர் எஸ்கே..! எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டீங்க.. காட் பிளஸ்.. காட் பிளஸ்.." என்று அவருக்குறிய ஸ்டைலில்,சிரிப்பில் கூறினார்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
armurigadosslatestNewsmadarsiRajinkanthSK
Advertisement
Next Article