நைட்டி அணிந்து அலப்பறை செய்த YOUTUBERS !
ஆடி அமாவாசையை முன்னிட்டு அரசு விழாவாக 20 நாட்கள் நடக்கும் வாவு பலி பொருட்காட்சி ஆண்டு தோறும் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றின் கரையில் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்த வருடம் நூறாவது ஆண்டு வாவு பலி பொருட்காட்சியை கடந்த 9 தேதி பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார் . இந்த பொருட்காட்சியை காண தினந்தோறும் ஏராளமான பெண்கள் குழந்தைகள் உட்பட குடும்பமாக பொதுமக்கள் வந்து செல்கிறார்கள் .
இந்நிலையில், நேற்று வாவு பலி பொருட்காட்சியை காண வந்த ஏராளமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரின் முன்பு நைட்டி அணிந்து YOUTUBERS 7 பேர் ஆபாச நடனம் ஆடி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறியுள்ளனர்.
நடனம் என்ற பெயரில் ஆட்டம் போட்ட இளைஞர்களை கண்டு பெண்கள் அச்சம் அடைந்த நிலையில், ஏழு பேர் மீதும் களியக்காவிளை உதவி ஆய்வாளர் பெனடிக்ட் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.