'அடி என்னடி ராக்கம்மா...' பாடல் பாடிய மூதாட்டி - ரசித்து கேட்ட #DistrictCollector!
உலக முதியோர் தினத்தையொட்டி கோவையில் நேற்று நடைபெற்ற விழாவில் மூதாட்டி ஒருவர் பாடிய 'அடி என்னடி ராக்கம்மா' பாடலை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ரசித்து கேட்டார்.
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு கோவையில் சமுகநலன் மற்றும் மகளிர்
உரிமைத் துறை சார்பில், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள்
பங்களிப்புடன் முதியோர் தின விழா கோவை உக்கடம் பெரியகுளம் பகுதியில்
நடைபெற்றது. விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து
கொண்டார்.
இந்த நிகழ்வில், பல்வேறு முதியோர் இல்லங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட
முதியவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். இவ்விழாவின் சிறப்பம்சமாக உக்கடம்
பெரியகுளத்தில், மாவட்ட ஆட்சியர் முதியோர்களுடன் படகு சவாரி செய்தார். அப்போது அங்கு இருந்த மூதாட்டி ஓருவர் 'அடி என்னடி ராக்கம்மா' என்ற பாடலை பாடினார். அதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ரசித்து கேட்டார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதியோர் இல்லங்களை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட
ஆட்சியர் நினைவு பரிசுகளை வழங்கினார். நிகழ்வில் கலந்து கொண்ட முதியோர்களுக்கு
மதிய உணவு வழங்கப்பட்டதோடு வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் கண்காட்சியை
பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் :TirupatiLaddu விவகாரத்தில் Twist | சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை திடீர் நிறுத்தம்!
இந்நிகழ்ச்சிக்கு பிறகு, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசி அவர் கூறியதாவது :
"முதியோர் நலனுக்காக மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மேலும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள்ளப்படும். இது போன்று முதியோர்கள் வெளியில் வருவதால் அவர்களுக்கு சமூகத்துடன் இணக்கம் ஏற்படும். இளைஞர்களும் முதியவர்களுடன் இணைந்து கலந்துரையாடினால் நல்ல புரிதல் வரக்கூடும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.