Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

செங்கல்பட்டு அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது..!

08:29 AM Jan 11, 2024 IST | Web Editor
Advertisement

செங்கல்பட்டில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புலிப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி யமஹா ஆர்.15 இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், வீலிங் செய்தபடி சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சென்றுள்ளார்.

இதையும் படியுங்கள் : முதல் டி20 போட்டி - இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, அந்த நபர் காஞ்சிபுரம் சாலை வழியே தப்பிச்சென்றார். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே அது தொடர்பான வீடியோக்கள் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில், பைக் சாகசத்தில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் அடுத்த பட்டா கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் திருப்பதி(22) என்பவரை செங்கல்பட்டு தாலுகா போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோன்று பைக் சாகசத்தில் ஈடுபட்ட கோகுல் என்ற மற்றொரு இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
arrestedbikebike adventurechengalpattuKanchipurammenseized
Advertisement
Next Article