Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முடிச்சி விட்டீங்க போங்க... ஆல் பாஸ் முறை ரத்து!

05:39 PM Dec 23, 2024 IST | Web Editor
Advertisement

8 ஆம் வகுப்பு வரையிலான ஆல் பாஸ் எனும் தோல்வியில்லாக் கொள்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

Advertisement

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இறுதித் தேர்வில் தோல்வியடைவோர் 2 மாதத்தில் மறுதேர்வு எழுதலாம். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல் வகுப்புக்கு செல்ல முடியும். துணை தேர்விலும் தோல்வி அடைந்தால் அதே வகுப்பில் தொடர வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் அதேநேரம், தேர்ச்சி பெறவில்லை என்பதைக் காரணம் காட்டி, பள்ளி நிர்வாகம் மாணவர்களை வெளியேற்றக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டாய தேர்ச்சி நடைமுறை, மத்திய கல்வி நிறுவனங்களான கேந்திர வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு பொருந்தும் எனவும் இதனை நடைமுறைப்படுத்துவது குறித்த முடிவை அந்தந்த மாநிலங்கள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் மத்தியக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
All PassfailSchoolsstudents
Advertisement
Next Article