Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"உள்ளூர் போட்டிகளில் இளம் வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும்" - #RishabhPant

04:33 PM Sep 05, 2024 IST | Web Editor
Advertisement

உள்ளூர் போட்டிகளில் மூத்த வீரர்களுடன் விளையாடும்போது, இளம் வீரர்கள் அவர்களிடத்திலிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும் என இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

துலிப் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (செப்.5) தொடங்குகிறது. மொத்தம் 4 அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடம் தலா ஒரு முறை மோதும். இந்த மூன்று சுற்று போட்டிகளின் முடிவில் முதல் இடம்பிடிக்கும் அணி கோப்பையை வெல்லும். இந்த தொடரில் பல முன்னணி வீரர்கள் விளையாட உள்ளனர்.  

அந்த வகையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் இந்த தொடரில் இந்தியா பி அணிக்காக விளையாடுகிறார். இவர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு, சிவப்பு பந்து போட்டியில் விளையாடவுள்ளார். இந்த சூழலில் உள்ளூர் போட்டிகளில் மூத்த வீரர்களுடன் விளையாடும்போது, இளம் வீரர்கள் அவர்களிடத்திலிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும் என இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரிஷப் பந்த் கூறியதாவது,

"கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கிய பிறகு, இந்திய அணிக்காக எப்போது விளையாடப் போகிறேன் என அடிக்கடி யோசித்தேன். கடந்த 6 மாதங்களில் ஐபிஎல் தொடரில் விளையாடினேன். இந்திய அணிக்காக விளையாடி உலகக் கோப்பையும் வென்றுள்ளோம். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எனது சிறுவயது ஆசை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு துலிப் கோப்பையில் விளையாட உள்ளேன்.

உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது மிகவும் முக்கியம். குறிப்பாக துலிப் கோப்பை போன்ற தொடர்களில் விளையாடுவது மிகவும் முக்கியம். ஒரு கிரிக்கெட்டராக அதிக பயிற்சிகள் தேவைப்படும். உள்ளூர் போட்டிகளில் மூத்த வீரர்களுடன் விளையாடும்போது, இளம் வீரர்கள் அவர்களிடத்திலிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும். அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் விளையாடும் இளம் வீரர்களுக்கு புதிய உத்வேகம் கிடைக்கும்."

இவ்வாறு இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் தெரிவித்தார்.

Tags :
CricketRishabh PantSportsTeam India
Advertisement
Next Article