கண்ணை சிமிட்டுனா மிஸ் பண்ணிடுவீங்க... 0.103 வினாடிகளில் ரூபிக்ஸ் கியூபை சால்வ் செய்த ரோபோ... வீடியோ வைரல்!
ரூபிக்ஸ் கியூபின் நிறங்களை ஒன்று சேர்ப்பது பெரிய சவாலாக இருந்து வருகிறது. இருப்பினம் இந்த விளையாட்டின் மீது பலருக்கும் ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. எவ்வளவு சீக்கிரம் ரூபிக்ஸ் கியூப் நிறங்களை ஒன்று சேர்க்கமுடியும் என்று உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளைக்காமல் முயற்சி செய்த வண்ணம் இருக்கின்றனர். அந்த முயற்சியில் பல உலக சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “யாரு சாமி நீங்க”… Snacks-காக செலவு செய்த பணத்தை முன்னாள் காதலியிடம் திருப்பி கேட்ட நபர்… தீயாய் பரவும் பதிவு!
இந்த நிலையில், அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று, கண் சிமிட்டுவதை விட வேகமாக ரூபிக்ஸ் கியூபை தீர்க்கக்கூடிய ஒரு ரோபோவை உருவாக்கி மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த ரோபோ 0.103 வினாடிகளில் கியூபை தீர்த்து உலக சாதனை படைத்துள்ளது. ஒரு மனிதன் கண் சிமிட்டுவதற்கு சுமார் 200 முதல் 300 மில்லி விநாடிகள் ஆகும். ஆனால், இந்த ரோபோ 0.103 வினாடிகளில் ரூபிக்ஸ் கியூபை தீர்க்கிறது. இதனால், நாம் கண் சிமிட்டினால் இது நகர்வதை பார்க்க முடியாது.
மேலும், இது மனிதக் கண்களால் பார்க்க முடிவதை விட வேகமானது ஆகும். கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு ஸ்லோ மோஷனில் பார்க்கும்பொழுதே ரோபோ, ரூபிக்ஸ் நிறங்களை ஒன்று சேர்ப்பதை பார்க்க முடிகிறது. கின்னஸ் அமைப்பு வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டில், மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷனைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு, 0.305 வினாடிகளில் ரூபிக்ஸ் கியூபை தீர்க்கும் ஒரு ரோபோவை உருவாக்கியது. இந்த சாதனையை அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழு உருவாக்கிய ரோபோ தற்போது முறியடித்துள்ளது.