Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இனி பணம் எடுக்க #ATM போகவே தேவையில்லை... ஏன் தெரியுமா?

03:28 PM Sep 30, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு நியாய விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படுவது ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. அதே நேரத்தில், பொங்கல் பண்டிகையில் அரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களும் ரேசன் கடைகளில் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. மேலும், அங்கு வேஷ்டி, சேலையும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், ஏடிஎம், வங்கி செல்லாமல் ரேஷன் கடைகளிலேயே வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்ளும் வகையில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது. இம்முறை ஏடிஎம், வங்கிகளுக்கு செல்லமுடியாத நிலையில் இருக்கும் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பயோமெட்ரிக் முறையில் இயங்கக்கூடிய டிஜிட்டல் கருவியானது, கோர் பேங்கிங் சேவைகளை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இது அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நிறுவப்பட்டு, அதற்கென ஒரு வங்கி ஊழியர் பணி அமர்த்தப்படுவார். இதற்காக ரேஷன் கடைகளை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.

Tags :
ATMMoneynews7 tamilRation Shoptamil naduTN Govt
Advertisement
Next Article