Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீங்கள் தான் மன்னர்கள்.. நீங்கள் சொல்வதை செய்யும் ‘தளபதி’ நான்.. - நடிகர் விஜய் பேச்சு!

07:03 AM Nov 02, 2023 IST | Web Editor
Advertisement

தளபதி என்பவர் மன்னர்கள் ஆணையிடுவதை அப்படியே செய்பவர்கள். மக்கள் நீங்கள் தான் மன்னர்கள். நீங்கள் சொல்வதை செய்யும் தளபதி நான். நீங்கள் ஆணையிடுங்கள் அதை செய்துவிட்டு போகிறேன் என நடிகர் விஜய் தெரிவித்தார்.

Advertisement

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி வெளியான லியோ திரைப்படம் ரூ. 540 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி நடைபோடுகிறது. இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் நடிகர் விஜய் 'நா ரெடி தான் வரவா' பாடலை பாடி பேச்சை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

“என் நெஞ்சில் குடியிருக்கும்... என் அன்பான நண்பா... நண்பிகளே... இவ்வளவு நாளாக, நான் தான் உங்களை என் நெஞ்சில் குடி வைத்துள்ளேன் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் தான் உங்கள் நெஞ்சில் என்னை குடி வைத்துள்ளீர்கள். குடியிருக்கும் கோயில்‌. உண்மையில் உணர்ந்துதான் சொல்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கு நான் என்ன செய்ய முடியும்? உங்கள் காலுக்கு என்னை செருப்பாக தைத்து போட்டாலும் ஈடாகாது.

உங்களுக்கு நான் உண்மையாக இருப்பேன். கொஞ்ச நாளாகவே சமூக வலைதளங்களில் கோபம் எல்லாம் அதிகமாகவே உள்ளது. நாம் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். நமக்கு நிறைய வேலை உள்ளது. வீட்டில் அப்பா அடித்தால் எங்கே போய் புலம்ப முடியும். இவ்வளவு கோபம் உடலுக்கு நல்லதுக்கில்லை.

பெரிதும் பெரிது கேள். அப்பா மாதிரி ஆகனும் என்பது கனவு. பெரிதாக கனவு காணுங்கள் நண்பா. அதில் தவறு கிடையாது. லியோ பாடலில் 2 வரிகள் பிரச்னை. சிகரெட் என ஏன் நினைக்கிறீர்கள். பேனாவாக இருக்கலாம். மதுபானம் என ஏன் நினைக்கிறீர்கள். கூழாக இருக்கலாம். இப்படி எல்லாம் என்னால் சமாளிக்க முடியும். ஆனால் சினிமாவை சினிமாவாக பாருங்கள்.

உலகம் முழுவதும் சினிமா மக்கள் விரும்பும் பொழுதுபோக்கு அம்சம். நல்லவன், கெட்டவன் என வேறுபடுத்தி காட்ட வெவ்வேறு காட்சிகள் வைக்க வேண்டும். எனக்கு கண்டிப்பாக தெரியும் அதை நீங்கள் பின்தொடர மாட்டீர்கள். நம் வாழ்க்கையில் பல்வேறு தீய விசயங்கள் இருக்கிறது. நல்லதை மட்டுமே தேர்வு செய்யுங்கள். பள்ளி கல்லூரி போகும் வழியில் கூட தான் டாஸ்மாக் இருக்கிறது. அங்கு ரவுண்டு அடிச்சிட்டா போறாங்க. கடந்து தானே போகிறார்கள்.

ஏவிஎம் நிறுவனம். சரவணன் சார். பல வருடங்களுக்கு முன் சிக்னலில் கஷ்டப்படும் அம்மாவை பார்த்து காசு கொடுத்துள்ளார். மிக்க நன்றி எம்ஜிஆர் என்று கூறியது சரவணனுக்கு புரியவில்லை. அப்போது யார் நல்லது செய்தாலும் எம்ஜிஆர் என்று நினைத்து கொள்வார்கள். எதிர்காலத்தில் எங்கு நல்லது நடந்தாலும் அதை நம்ம பசங்க தான் பண்ண வேண்டும் என்று ஆசை.

லோகேஷ் கனகராஜின் ‘மாநகரம்’ படம் மூலம் திரும்பி பார்க்க வைத்தார். கைதி மூலம் திரும்ப திரும்ப பார்க்க வைத்தார். ’விக்ரம்’ மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். லியோ. உலகத்தையே திரும்பி பார்க்க வைப்பார். சினிமாவை எவ்வளவு நேசிக்கிறார் என்பது மாஸ்டர் ரிலீஸின் போது, அவரிடம் நான் கேட்ட ஒரே வார்த்தைக்காக ஒரு வருடம் கழித்து தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்தார்கள். நன்றி லலித்.

அனிருத் நாளுக்கு நாள் அவர் வெயிட் ஏறிகிட்டே செல்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. அன்பறிவு‌, சுப்பிரமணி எல்லோருக்கும் நன்றி. தமிழ் சினிமா நமக்கு கொடுத்துள்ள நட்சத்திர நாயகர்கள்

’புரட்சித்தலைவர் என்றால் ஒருத்தர் தான்,
நடிகர் திலகம் என்றால் ஒருத்தர் தான்,
கேப்டன் என்றால் ஒருத்தர் தான்,
உலக நாயகன் என்றால் ஒருத்தர் தான்,
சூப்பர் ஸ்டார் என்றால் ஒருத்தர் தான்,
தல என்றால் ஒருத்தர் தான்,
தளபதி... என்பவர் மன்னர்கள் ஆணையிடுவதை அப்படியே செய்வார்கள்...’

மக்கள் நீங்கள் தான் மன்னர்கள். நீங்கள் சொல்வதை செய்யும் தளபதி நான். நீங்கள் ஆணையிடுங்கள் அதை செய்துவிட்டு போகிறேன். கற்பனையாக ஒரு கட்சியில் இலாகா கொடுக்க வேண்டும் என்றால் போதைப்பொருள் தடுப்பில் ஒரு அமைச்சர் பதவி லோகேஷுக்கு கொடுக்கலாம். வெற்றி தோல்வி இருந்தாலும் தோல்வியை பற்றிதான் யோசிப்பேன். ” என தெரிவித்தார்.

தொடர்ந்து தொகுப்பாளர்கள் கேட்கும் கேள்விக்கு விஜய் பதிலளிக்கையில்,

கல்வி - சரிசமமாக ஏற்றத்தாழ்வு இல்லாமல் கிடைக்க வேண்டிய விசயம்,

புகழ் - முதல்வன் படத்தில் அர்ஜுன் பெயர்,

மக்கள் - புடிச்சா தட்டி குடுப்பாங்க, புடிக்கலைனா தட்டி விட்டு விடுவார்கள்,

எம்ஜிஆர் - இதுவரை தோல்வியே காணாத தலைவர்

2026 - 2025க்கு அப்புறம் வரும் ஆண்டு - 2026 கால்பந்து ஆட்டம் உலகக்கோப்பை.. சீரியஸாக கப்பு முக்கியம் பிகிலு.

எனக்கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.

Tags :
AniruthChennaiLeoLeo Success MeetLokesh KanagarajNews7Tamilnews7TamilUpdatesthalapathy vijayThe Roar Of LEOTrishavijay
Advertisement
Next Article