Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அவர மாதிரியே பன்றானே...! சிவகாசியில் மைக்கேல் ஜாக்சன்!

03:34 PM Mar 07, 2024 IST | Web Editor
Advertisement

சிவகாசியில் இளைஞர் ஒருவர் மைக்கேல் ஜாக்சன் போன்று தொப்பி,  உடை அணிந்தும்,  ஹெட்செட் மாட்டிக்கொண்டும் நடனம் ஆடி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Advertisement

சிலருக்கு பாட வரும்.  சிலருக்கு நடனமாட வரும்.  ஆனால்,  இவ்விரண்டையும் கலந்து அரங்கத்தையே ஒருவர் அதிரவைப்பாரேயானால்,  அந்த பாப் உலக ராஜா தான்,  மைக்கேல் ஜாக்சன்.  அசத்தலாக மக்களை வசீகரிக்கும் பாடலை பாடிக்கொண்டிருப்பார். திடீரென தனக்கே உரிய moon walk,  anti gravity lean,  spin,  toe stand ஒரு சுழட்டு சுழற்றி ஒரு நடனத்தை ஆடும் போது பார்பவர்களை அது மெய்சிலிர்க்க வைக்கும்.  அதுவே, அசத்தலான மைக்கேல் ஜாக்சன் style.  அந்த பாடலிலும்,  நடனத்திலும்,  பொழுதுபோக்கு எப்போதும் இருக்கும்.  வசீகரிக்கும் பாடகராக,  moon walk நடன வித்தகராக,  மக்களை ஈர்க்கும் இசை கலைஞனாக,  சாமானியருக்காக குரலெழுப்பும் மனித நேயனாக,  இந்த உலகிற்கு மைக்கேல் ஜாக்சன் எத்தனையோ நன்மைகளை செய்தார்.

1958 ஆகஸ்ட் 29ம் தேதி ஒரு கருப்பின குடும்பத்தில் பிறந்தவர் தான் மைக்கேல் ஜாக்சன். அமெரிக்காவில் உள்ள இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் ஜாக்சன்,  கேத்ரின் எஸ்தர் என்ற ஏழை தம்பதியின் 7வது மகனாக பிறந்தார்.  மைக்கெல் ஜாக்சனின் got to be there நல்ல வரவேற்பைப் பெற 1972ல் அந்த பெயரிலேயே மைக்கேல் ஜாக்சனின் முதல் ஆல்பம் ரிலீஸானது.  அப்போது மைக்கெல் ஜாக்சனின் வயது 14.  தொடர்ந்து அதே ஆண்டு வெளியான BEN,  அடுத்தடுத்த ஆண்டுகலில் வெளியான MUSIC AND ME, FOREVER MICHEL ஆகிய ஆல்பங்களும் வெற்றியைப் பெற்றன.

இசை உலகின் உயரிய விருது எனக் கருதப்படுகிற கிராமி விருதுகள் உட்பட பலவிருதுகள் மைக்கேலை தேடி வந்தன.  தற்போதும் மைக்கேல் ஜாக்சன் என்று சொன்னால் நமது நினைவுக்கு வருகிற பீட் இட்,  பில்லி ஜீன்,  பேபி பீ மைன் போன்ற பாடல்கள் இந்த ஆல்பத்தில்தான் இடம்பெற்று இருக்கின்றன.  இந்தப் ஆல்பத்திற்காக ஏழு கிராமி விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் உலகமே போற்றும் வகையில் பிரபல பாடகர் மற்றும் நடன கலைஞராக மாறினார்.

1979 ஆம் ஆண்டு ஒரு பயிற்சியின் போது கிழே விழுந்து மூக்கு உடைந்திருந்தது அதையும் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து சிறியதாக ஆக்கிக் கொண்டிருந்தார்.  மேலும் 1984 ஆம் ஆண்டு மேடையில் பில்லி ஜீன் பாடலுக்கு வெறி பிடித்தது போல் அடிக்கொண்டிருந்த மைக்கேல் ஜாக்சனின் முடியில் தீ பற்றி அது அவரது முகத்தையும் பாதித்தது. இதனையடுத்து மீண்டும் ஒரு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்த அவர் தனது முடியை நீளமாக மாற்றிக் கொண்டார். இத்துடன் விடிலிகோ பிரச்னையால் அவர் அடிக்கடி ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டியிருந்தது.  அது ஏற்படுத்தும் வலியின் காரணமாக அதிக மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.  இதுதவிர பல நடன அசைவுகளை மேற்கொள்ள அவர் தனது எடையை பெருமளவு குறைக்கவேண்டியிருந்தது.  1980 களில் அமெரிக்கா மட்டுமின்றி உலகில் உள்ள பல நாடுகளில் ரசிகர்கள் அவருடைய பாடல், நடனத்திற்கு அடிமையாக இருந்தனர் என்பதும் அவரது இசை நிகழ்ச்சி என்றால் கோடி கணக்கில் வசூல் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு திடீரென அவர் மாரடைப்பால் காலமானார். மைக்கேல் ஜாக்சனின் இறப்பு உலகையே அதிரச்செய்தது. பலரால் மைக்கேல் ஜாக்சன் இறந்ததை நம்ப முடியவில்லை.  இசை ரசிகர்கள் கண்ணீர் வடித்தனர். பல இடங்களில் அவரது பாடல்களை பாடி ஆடி அவருக்கு மரியாதை செய்தனர்.

இதையடுத்து, தற்போதிய காலகட்டத்தில் மைக்கேல் ஜாக்சனை போல வேடம் அணிந்து நடனம் ஆடுவோர் என்ற பலர் உண்டு.  அந்த வகையில், சிவகாசியில் ஒரு இளைஞர் மைக்கேல் ஜாக்சனை போல் நடனம் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். குறிப்பாக,  தொப்பி,  உடை அணிந்தும்,  ஹெட்செட் மாட்டிக்கொண்டும் மைக்கேல் ஜாக்சனை போல நடனம் ஆடி பொது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இதையடுத்து, மக்கள் அதிகம் கூடும் பொதுவான இடங்களில் இந்த இளைஞர் மைக்கேல் ஜாக்சனை போல moon walk ஆடி பொது மக்களின் ஆதரவை பெறுகிறார்.

Tags :
Michael JacksonPeoplesivakasiVirudhunagar
Advertisement
Next Article