Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“என்னை அடிக்கிறாங்க... தயவு செஞ்சு உதவி பண்ணுங்க...” - குவைத்தில் சிக்கிய கோவை பெண் கண்ணீர் மல்க கோரிக்கை

10:11 AM Nov 04, 2023 IST | Jeni
Advertisement

வீட்டு வேலைக்காக குவைத்துக்கு சென்ற பெண் ஒருவர், அங்கு தன்னை வீட்டு உரிமையாளர்கள் அடித்து துன்புறுத்துவதால், தன்னை மீட்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோக மகேஸ்வரி. இவர் வீட்டு வேலைக்காக குவைத் நாட்டுக்குச் சென்றுள்ளார். 14 மாதங்களுக்கும் மேலாக மகேஸ்வரி அங்கு வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், தான் வேலை செய்து வரும் வீட்டின் உரிமையாளர்கள் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும்,  உடனடியாக தன்னை மீட்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கூறி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “குவைத்திற்கு வீட்டு வேலைக்கு வந்து 14 மாதங்கள் ஆகிறது. மொழி தெரியவில்லை என்பதற்காக வீட்டு உரிமையாளர்கள் தகாத வார்த்தைகளால் பேசி என்னை அடித்து துன்புறுத்துகின்றனர். நெருங்கிய உறவினர் இறப்புக்கு கூட ஊருக்கு அனுப்ப முடியாது என கூறிவிட்டார்கள். 305 தினார் கொடுத்து விட்டு ஊருக்கு போ என்று கூறுகிறார்கள். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை.

இதையும் படியுங்கள் : அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்பான இடங்களில் 2வது நாளாக தொடரும் IT சோதனை...!

குவைத்திலிருந்து என்னால் வேலை செய்ய முடியவில்லை. என்னை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்ப உதவுங்கள். எனக்கு 2 குழந்தைகள் உள்ளன. நான் இல்லாமல் என் குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள். என்னை தாயகத்திற்கு அழைத்து செல்ல உதவி செய்யுங்கள்” என்று மகேஸ்வரி பேசியுள்ளார்.

Tags :
CoimbatoreHelpKuwaitRequestTNGovtWORK
Advertisement
Next Article