Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

09:55 AM Jun 01, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

Advertisement

தமிழ்நாட்டில் இன்றும் மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

தென்தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சனிக்கிழமை (ஜூன் 1) முதல் ஜூன் 6 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

ஜூன் 1-ல் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதேபோல் ஜூன் 2-இல் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு கன மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜூன் 1,2-ஆகிய தேதிகளில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Heavy rainMeteorological CentreTamilNaduWeatheryellow alert
Advertisement
Next Article