கேரளாவில் இன்று 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் | #IMD எச்சரிக்கை!
கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் நிற எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாக இருக்கும் வளிமண்டல காற்றழுத்த மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டில் நவ.9 ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல், கேரளாவில் அடுத்து 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : WeatherUpdate | அடுத்த 2 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
இதையடுத்து, இன்று (நவ.4ம் தேதி) முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை கேரளாவில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.