யாஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்... கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட'டாக்ஸிக்' படக்குழு!
நடிகர் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்ஸிக் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவர் ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கடந்த 2018ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில், பிரகாஷ் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் 1,கே.கி.எப் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் யாஷ் இந்திய அளவில் பிரபலமானார். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. இதனை தொடர்ந்து நடிகர் யாஷ் தனது 19-வது படத்தில் நடித்து வருகிறார்.
”டாக்ஸிக்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல நடிகையும் இயக்கனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இதில் யாஷ் உடன், கியாரா அத்வானி, ஹீமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படர்த்தை கேவிஎன் புரொடக்ஷன் தயாரிக்கிறது.
இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நடிகர் யாஷ் இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு 'டாக்ஸிக்' படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டு படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்த வீடியோவில் நடிகர் யாஷ் பப் ஒன்றுக்கு சென்று பியானோ வாசிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கே.ஜி.எஃப் போன்றே இந்தப் படத்திலும் யாஷ் தோற்றம் கோட், சூட் அணிந்தபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் நடிகர் யாஷ் ராமாயணாம் திரைப்படத்தில் ராவணனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.