யாசகம் பெற QR குறியீட்டை பயன்படுத்தும் பார்வை மாற்றுத்திறனாளி!
அசாமில் பார்வை மாற்றுத்திறனாளி யாசகர் ஒருவர் புதிய முறையில் யாசகம் பெறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அசாமின் குவாஹாட்டியின் சாலையில் பார்வை மாற்றுத்திறனாளி யாசகர் ஒருவர் யாசகம் கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பல கருத்துகளை பெற்று வருகிறது. அந்த வீடியோவில் யாசகர், யாசகத்தை பெற QR குறியீட்டை பயன்படுத்துகிறார். இந்த வீடியோவை அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் சோமானி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பகிர்ந்து அவர் கூறியுள்ளதாவது;
“சலசலப்பான குவாஹாட்டியின் சாலையின் மத்தியில் ஒருவர் தடுமாறுகிறார். யாசகர் ஒருவர் தனது உதவிக்கான வேண்டுகோளுடன் PhonePe ஐப் பயன்படுத்தி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார். தொழில்நுட்பத்திற்கு உண்மையிலேயே எல்லையே தெரியாது. தற்போதைய சமூக-பொருளாதார நிலையிலும் கூட, தடைகளைத் தாண்டிச் செல்லும் தொழில்நுட்பத்தின் சக்திக்கு இது ஒரு சான்றாகும்.
இந்த தருணம் கருணை மற்றும் புதுமையின் வளர்ச்சியை பற்றி தூண்டுகிறது. மனிதநேயம் மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்தின் இந்த புதிரான சந்திப்பைப் பற்றி சிந்திப்போம்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.