Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா? மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதில்!

03:49 PM Nov 17, 2023 IST | Web Editor
Advertisement

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து அவரது குடும்பத்துடன் இணைந்து என்ன சாத்தியமோ அதற்கான நடவடிக்கை எடுப்போம் என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். 

Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா, சென்னையில் நேற்று முன்தினம் காலமானார்.  அவருக்கு வயது 102.  உடல் நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணம் அடைந்தார். அவரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,  சென்னை குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.  பின்னர் சங்கரய்யா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அப்போது அவர்,  தான் சிறு வயது முதலே ஏபிவிபி இயக்கத்தில் இருந்தாலும் சங்கரய்யா மீது பெரும் மதிப்பு தனக்கு உண்டு என அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர், சுதந்திர போராட்ட வீரராக கடைசி வரை கொள்கை பிடிப்புடன் இருந்தவர் சங்கரய்யா.  அவரது சமூக பங்களிப்பு மிக முக்கியமானது.  அவருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்பது ஏற்கனவே பேசி இருக்கிறார்கள். சரியான கோரிக்கை தான் நானும் வலியுறுத்துகிறேன் என்றார்.

அப்போது பாரத ரத்னா விருது சங்கரய்யாவுக்கு வழங்க சாத்தியமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  சங்கரய்யாவுக்கான விருது குறித்து அவர் குடும்பத்துடன் இணைந்து என்ன சாத்தியமோ, அதற்கான நடவடிக்கை எடுப்போம் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

Tags :
cpimFreedom fighterL Murugan BJPmarxistN.sankaraiahnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article