Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது!

நாட்டின் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிப்பு...
06:35 PM Apr 10, 2025 IST | Web Editor
Advertisement

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதான பாரதிய பாஷா விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படவுள்ளது.

Advertisement

நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ள எஸ். ராமகிருஷ்ணன் தனது 'சஞ்சாரம்' என்ற நாவலுக்காக 2018ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

ஞானவாணி விருது, தாகூர் இலக்கிய விருது, இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, இலக்கியச் சிந்தனை விருது, கலைஞர் பொற்கிழி விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய வேள் விருது, தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

இவரது படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், மலையாளம், பிரெஞ்சு, ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், அரபு, ஸ்பானிஷ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளன.

மே 1 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள விழாவில் எஸ். ராமகிருஷ்ணனுக்கு விருது வழங்கப்படவுள்ளதாக பாரதிய பாஷா பரிஷித் தெரிவித்துள்ளது.

Tags :
Bharatiya Bhasha ParishadS RamakrishnanWriter
Advertisement
Next Article