Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான மரியாதை வழங்கப்படும்! - ஹரியானா அரசு அறிவிப்பு!

10:05 AM Aug 08, 2024 IST | Web Editor
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கான மரியாதை வழங்கப்படும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

Advertisement

33வது ஒலிம்பிக் போட்டியில், நேற்று (ஆக. 7) நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில், 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகம் இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

அரையிறுதியில் வினேஷ் போகத்திடம் தோற்ற வீராங்கனை இறுதிப் போட்டியில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தை நாடியுள்ள வினேஷ் போகத், அரையிறுதியில் வெற்றி பெற்றதால் வெள்ளிப் பதக்கம் கோரியுள்ளார்.

அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.இதனிடையே, என்னிடம் இனி போராட சக்தியில்லை என்று இந்திய வீராங்கனை வினேஷ் போகத்,  இன்று காலை மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

இதையும் படியுங்கள் : வங்கதேசம் : முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்பு!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருக்கான அனைத்து மரியாதையும் வழங்கப்படும் என்று ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார். நாடு திரும்பும் வினேஷ் போகத்துக்கு, வெள்ளிப் பதக்கம் வென்ற வீரருக்கு வழங்கப்படும் வரவேற்பும், மரியாதையும் வழங்கவும், வெகுமதி மற்றும் வசதிகள் செய்து தருவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
cmoharyanaharyanaOlympics2024ParisParis2024Paris2024OlympicParisOlympics2024VineshPhogatWrestling
Advertisement
Next Article