Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

லண்டனில் நடைபெற்ற #WR செஸ் மாஸ்டர்ஸ் போட்டி | கோப்பையை வென்றார் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி!

01:56 PM Oct 18, 2024 IST | Web Editor
Advertisement

லண்டனில் நடைபெற்ற டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.

Advertisement

அரையிறுதியில் பிரக்ஞானந்தாவை அர்ஜுன் எரிகைசி வென்றார். மற்றுமொரு அரையிறுதியில் எம்விஎல் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவை ஆர்மகெடானில் வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் பிரென்சு வீரர் எம்விஎல் உடன் நேற்று மோதினார். இரண்டு கிளாசிக்கல் ஆட்டங்களிலும் டிரா ஆனதால் ஆட்டம் ஆர்மகெடானை நோக்கி சென்றது. அதில் மூன்றிலும் வென்று அர்ஜுன் எரிகைசி கோப்பையை வென்றார்.

கிளாசிக்கல் ஆட்டங்களில் வென்றிருந்தால் 2,800 என்ற புள்ளிகளை கடந்திருப்பார். ஆனால், டிரா ஆனதால் இந்த சாதனையை அர்ஜுன் எரிகைசியினால் நிகழ்த்தமுடியாமல் போனது. இதுவரை 14 பேர் மட்டுமே 2,800 புள்ளிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, அர்ஜுன் எரிகைசி 2796.1 என்ற புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் நீடிக்கிறார்.

20,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.18 லட்சம் 23 ஆயிரம்) பரிசுத் தொகையாகக் கிடைத்தது. மேலும், 27.84 ஃபிடே சர்கியூட் பாயிண்டுகள் கிடைத்தன. இது குறித்து அர்ஜுன் எரிகைசி, “நான் கிளாசிக்கல் ஆட்டதிலேயே வென்றிருக்க வேண்டும்” எனக் கூறினார்.

Tags :
ChessWR Chess Masters Cup
Advertisement
Next Article